“சிவானி பொறியியல் கல்லூரியில் வளர் தமிழ் பேரவை சார்பில் தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்”

சிவானி பொறியியல் கல்லூரியில் வளர் தமிழ் பேரவை சார்பில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 05.11.2026 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் மையத் தலைப்பாக “பண்டிகைகள் வளர்ப்பது – உறவுகளையா? உணர்வுகளையா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

November 5, 2026

சிவானி பொறியியல் கல்லூரி

“சிவானி பொறியியல் கல்லூரியில் வளர் தமிழ் பேரவை சார்பில் தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்”

நிகழ்ச்சி அறிக்கை

  • சிவானி பொறியியல் கல்லூரியில் வளர் தமிழ் பேரவை சார்பில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 05.11.2026 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

  • இந்நிகழ்ச்சியின் மையத் தலைப்பாக “பண்டிகைகள் வளர்ப்பது – உறவுகளையா? உணர்வுகளையா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

  • நிகழ்ச்சிக்கு வளர் தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவருமான திரு .ஜவஹர் அவர்கள் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

  • பட்டிமன்றத்தின் நடுவராக கட்டடப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் திரு. கே.பி. ரவிக்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் பட்டிமன்றத்தை வழிநடத்தினார்.

  • முதலாம் ஆண்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது கருத்துகளையும், நகைச்சுவை கலந்த சிந்தனைகளையும் அழகாக வெளிப்படுத்தினர்.

  • பட்டிமன்றத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள்:

         1.கமலிஸ்ரீ (Kamali Sree)

         2.மதுமிதா (Madhumitha)

        3. அக்ஷய் ஆனந்த் (Akshay Anand)

         4.நிஷாந்தினி (Nishanthini)

       5.கௌஷிகா (Kowshika)

         6.தனுஷ்யா (Dhanushya)

  • இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் வி. பாலசுப்ரமணியம் அவர்கள் பங்கேற்று பட்டிமன்றத்தில் கலந்துகொண்ட மாணவ, மாணவியர்களைப் பாராட்டி கௌரவித்தார்.

  • இந்நிகழ்ச்சியை கணிதத் துறைத் தலைவர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார். கல்லூரியின் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

  • நிறைவாக, வளர் தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் திரு.ஜவஹர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

  • இப்பட்டிமன்றம் மாணவர்களின் பேச்சாற்றல், சிந்தனைத்திறன், தமிழ்மொழிப் பற்று மற்றும் மேடைப் பேச்சுத் திறனை வளர்க்கும் வகையில் அமைந்ததுடன், தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியையும் உறவுகளின் மேன்மையையும் உணர்த்தும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

    “தமிழ் வளர்ப்போம்! தமிழால் இணைவோம்!! பண்பாட்டைப் போற்றுவோம்!!!” 

image

PROGRAMME ON    “சிவானி பொறியியல் கல்லூரியில் வளர் தமிழ் பேரவை சார்பில் தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்”   at Held on 05.11.2026 at SHIVANI ENGINEERING COLLEGE, POOLANGULATHUPATTI.